குடிமக்கள் கணக்கு திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் உதவியிலிருந்து பயனடையும் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து, திட்டத்திற்கான பதிவு செப்டம்பர் 2023 வரை செயல்பாட்டில் இருக்கும் என உத்தரவு பிறப்பித்துள்ளார் இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான்.
உலகளாவிய விலைவாசி உயர்வின் தாக்கத்திலிருந்து சவுதிவாழ் குடும்பங்களைப் பாதுகாக்க கூடுதல் நிதியுதவி வழங்குவதற்காகக் குடிமக்கள் கணக்குத் திட்டம் ஜூலை 2022 இல் வெளியிடப்பட்டு, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2023 இல் வழங்கப்பட்ட அரச உத்தரவுகளின்படி இந்தத் திட்டம் ஜூலை 2023 வரை செயல்பாட்டில் இருந்தது எனச் சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.