பெரிய மசூதியில் உள்ள மத்தாஃப் விரிவாக்கக் கட்டிடத் திட்டத்திற்கு சவூதி போர்டிகோ என்று பெயரிட சவூதி உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக இரண்டு புனித மசூதியின் பிரசிடென்சியின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.
அப்பாஸிட் போர்டிகோவைச் சுற்றியுள்ள சவூதி போர்டிகோ பரந்த பகுதியைக் கொண்டுள்ளது. தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் மெஸ்ஸானைன் மற்றும் கூரை என நான்கு தளங்களைக் கொண்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 287,000 வழிபாட்டாளர்களையும், ஒரு மணி நேரத்திற்கு 107,000 தவாஃப் செய்பவர்களை உள்ளடக்கும் என ஷேக் அப்துல் ரஹ்மான் அல்-சுதாயிஸ் கூறியுள்ளார்.
பெருகி வரும் பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில் கிராண்ட் மசூதியை விரிவாக்க நவீன சவூதி அரேபியாவின் நிறுவனர் மன்னர் அப்துல் அஜீஸ் உத்தரவிட்டார், அதன்படி, 1955 ஆம் ஆண்டு சவூதி மன்னர் காலத்தில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டது.
கிங் சவுத், கிங் ஃபைசல் மற்றும் கிங் காலித் ஆகியோரின் காலங்களிலும் போர்டிகோ கட்டிடத்தின் விரிவாக்கம் தொடர்ந்த பணி கிங் ஃபஹத் , மன்னர் அப்துல்லா மற்றும் தற்போதைய காலத்தில் முடிவடையும் நிலையில் உள்ளது.
துல்லியமான பொறியியல் தரத்திற்கு ஏற்பப் பயணிகள், வழிபாட்டாளர்களுக்கு மிகுந்த இடங்களைச் சவூதி போர்டிகோ வழங்குகிறது என்று அவர் கூறியுள்ளார். தொழில்நுட்ப சேவைகள்,ஒலி மற்றும் ஒளி அமைப்புகளின் கிடைக்கும் தன்மையால் இது வேறுபடுகிறது, பயணிகளுக்கு ஆன்மீக சூழலை உருவாக்கப் பங்களிக்கிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.