காட் போதைப் பொருளை மறைத்து வைத்து வாகனத்தை ஓட்டிச் சென்ற சவூதி குடிமகன் ஒருவரை Jazan மாகாணத்தில் உள்ள Dhamad என்ற இடத்தில், போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர் சுமார் 114 கிலோ காட் போதை பொருளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்மீது வழக்கு தொடுத்து பொது வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட் என்பது பசுமையாகப் பூக்கும் ஒரு வகை புதர் ஆகும், தூண்டுதல் போன்ற விளைவுக்காக இவை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.
போதைப் பொருள் விற்பனை அல்லது கடத்தல் நடவடிக்கைகள் குறித்து மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் 911 என்ற எண்ணிற்கும், மற்ற பகுதிகளுக்கு 999 என்ற எண்ணிற்கும்
புகார் அளிக்குமாறு அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகம் 995 மற்றும் 995@gdnc.gov.sa மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் புகாரில் பகிரப்படும் அனைத்து தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.