Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் காட்டு தாவரங்களின் மரபணு வகைப்பாடு திட்டத்தை செயல்படுத்த, கலந்தாய்வை நடத்துகிறது சவூதி அரேபியா.

காட்டு தாவரங்களின் மரபணு வகைப்பாடு திட்டத்தை செயல்படுத்த, கலந்தாய்வை நடத்துகிறது சவூதி அரேபியா.

174
0

தேசிய தாவர உறை மேம்பாடு மற்றும் பாலைவனமாக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மையம் (NCVC) கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (KAUST) பாலைவன வேளாண்மை மையத்துடன் இணைந்து, சவூதியில் அழிந்து வரும் தாவரங்களை வளர்க்க மரபணு வகைப்பாடு திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து கலந்தாய்வு கூட்டத்தை நடத்துகிறது.

NCVC இன் CEO டாக்டர். கலீத் பின் அப்துல்லா அல்-அப்துல்காதர் மற்றும் நிபுணர்கள் குழு KAUST இன் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பல்கலைக்கழகத்தின் பாலைவன வேளாண்மை மையத்தின் இயக்குனர் பேராசிரியர் ராட் விங் தலைமையில் ஆன்லைன் சந்திப்பை நடத்தியது.

அல்-கடா, அல்-ரூட்டா போன்ற மர வகைகளுடன் கூடுதலாக ஜூனிபர், ஃபிகஸ் மற்றும் லாவெண்டர் போன்ற மிக முக்கியமான காட்டு தாவரங்களின் மரபணு வரைபடங்களை வரைவதற்கான முக்கிய வழிமுறைகள் பற்றிக் கலந்தாய்வில் விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!