சவூதி அரேபிய பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்கள் வருடாந்திர ஹஜ் வரவேற்பு விழாவின் போது, காஸா பகுதியில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்தவும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள பாலஸ்தீன பொதுமக்களின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தினார்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் காஸா பகுதியில் உடனடி போர் நிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தினார், கிழக்கு ஜெருசலேமை அதன் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாகச் சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.