சவூதி அரேபியாவின் கல்வி அமைச்சர் யூசப் அல்-பென்யான், சவூதிக்கான இந்திய தூதர் டாக்டர். சுஹெல் அஜாஸ் கான் மற்றும் போலந்து தூதர் ராபர்ட் ரோஸ்டெக்கையும் சந்தித்து சவூதி அரேபியாவிற்கும் இந்தியா மற்றும் போலந்திர்க்கும் இடையே பல்கலைக்கழக கல்வி, அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான வழிகள் குறித்துக் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள், கல்வி அமைப்பில் கூட்டுப் பணிக்கான துறைகள் மற்றும் சவூதி அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அறிவியல் பரிமாற்றம் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்துள்ளனர்.
அல்-பென்யான் மற்றும் ரோஸ்டெக் சவூதி மாணவர்கள் போலந்து பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக உதவித்தொகையை ஆதரிப்பது குறித்தும், மருத்துவம் மற்றும் நர்சிங் துறைகளில் உதவித்தொகை திட்டம் குறித்தும், போலந்து மாணவர்கள் சவூதி பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு சவூதி அரேபியா வழங்கும் உதவித்தொகைகள் குறித்தும் விவாதித்தனர்.