கறிவேப்பிலை நெல்லிக்காய் மஞ்சள் இவை மூன்றையும் பொடி செய்து சம அளவாகக் கலந்து இதில் மூன்று கிராம் மட்டும் எடுத்துக் காலை மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட்டு வரக் கணையம் சீராக இயங்கும்.
சர்க்கரை நோயால் பாதிப்பு ஏற்பட்டு இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டால் மீண்டும் இன்சுலினை சுரக்கச் செய்து சர்க்கரை நோயின் பாதிப்புகள் அனைத்தையும் முழுமையாக நீக்கும்.
கறிவேப்பிலை சீரகம் இஞ்சி தலா ஐந்து கிராம் அளவு எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து கால் லிட்டராகக் காய்ச்சி இதில் நூறு மில்லி எடுத்துக் காலை மாலை இருவேளையும் குடித்து வர நீண்ட நாளாகத் தொல்லை தருகின்ற அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லை ஓரிரு வாரக் காலங்களில் முழுமையாகக் குணமாகிவிடும்.
கறிவேப்பிலை இலையை மைபோல அரைத்து இதில் நூறு கிராம் எடுத்துக் கொண்டு அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து லேசான தீயில் காய்ச்சி தைல பதத்தில் பத்திரப்படுத்திக் கொண்டு தலைமுடிக்கு தொடர்ந்து தேய்த்து வரத் தலை முடியானது கருமையாகவும் அடர்த்தியாகவும் நீண்டும் வளர்ந்து வரும்.
கறிவேப்பிலையை மைபோல அரைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரக் கண்களுக்குப் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
மொத்தத்தில் கருவேப்பிலையை தினந்தோறும் பச்சையாகவோ அல்லது பொடியாகவோ செய்து தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பது முற்றிலும் உண்மை.