உடலுடைய நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாக அல்லது உடல் ஒவ்வாமை காரணமாக அல்லது உடலுடைய நோய்களின் மூலம் ஏற்பட்ட பலவீனம் காரணமாக நமக்கு ஏற்படுகின்ற எல்லாவிதமான சிரமங்களையும் குறைக்கும் ஓர் அற்புத மருந்து…
அலர்ஜிக் சைனசைடிஸ், மேலடுக்கு நுரையீரல் நோய்கள், சைனஸ் மூக்கு அடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி,
தும்மல், சளி, தொண்டை கட்டு, தொண்டை தொற்று, இருமல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் மருந்து இது…
தலைவலி, தலை பாரம், தலையில் நீர் கோர்த்துக் கொள்வது, காது அடைப்பு ஆகிய பிரச்சினைகளைப் போக்கும் அரிய மருந்து.
தயார் செய்யும் முறை
கடுகு, குமட்டிக் காய், புஷ்கர மூலம், கர்கடக சிருங்கி, பாகற்காய், சுக்கு இவை அனைத்தையும் தலா இரண்டு கிராம் வீதம் நானூறு மில்லி நீரில் இட்டு மிதமான சூட்டில் நன்கு காய்ச்சி நூறு மில்லி அளவில் கசாயாமாகச் சுருக்கி அதனை வடிகட்டித் தினம் காலை இரவு என உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் குடித்துவர சைனஸ் உட்பட சுவாச மண்டலங்கள் தொடர்பான அனைத்து நோய்களும் படிப்படியாகக் குணமடையும்.