Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஓரினச்சேர்க்கை ஒரு கொடிய குற்றம் – குத்பா பிரசங்கத்தில் மக்கா இமாம்.

ஓரினச்சேர்க்கை ஒரு கொடிய குற்றம் – குத்பா பிரசங்கத்தில் மக்கா இமாம்.

140
0

மக்காவில் உள்ள பெரிய மசூதியின் இமாமும் போதகருமான ஷேக் பைசல் கஸ்ஸாவி, ஓரினச்சேர்க்கை ஒரு கொடூரமான குற்றம் என்று கூறி, சமூகத்தில் அதிகரித்து வரும் ஒழுக்கக்கேடான போக்குகள், குறிப்பாகப் பாலியல் வக்கிரம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து இஸ்லாமியர்களையும் எச்சரித்துள்ளார்.

மக்காவில் உள்ள பெரிய மசூதியில் தனது வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில், தார்மீக விழுமியங்களை நிலைநிறுத்துவதன் அவசியத்தையும் திருமண உறவுகளின் புனிதத்தைப் பேணுவதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். “சர்வவல்லமையுள்ள இறைவன் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணத்தை உலகளாவிய சட்டமாக ஆக்கியுள்ளார், ஆனால் தீய சக்திகள் இறை விசுவாசிகளை இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறவும், நல்ல இயல்புகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தவும் தவறாக வழி கேட்டுக்கு உள்ளாக்குகிறது. இந்தச் சூழ்நிலையானது, தீய சக்திகள், உள்ளார்ந்த இயல்பை அழித்து, ஆணுடன் ஒரு ஆண் திருமணம் (ஓரினச்சேர்க்கை திருமணம்) மற்றும் ஒரு பெண்ணை ஒரு பெண்ணுடன் திருமணம் (லெஸ்பியன் திருமணம்), விலங்குகளுடன் கலப்புத் திருமணம், தூண்டுதல் போன்ற இழி நிலைகளுக்கு உள்ளாகி, பாலியல் வக்கிரம் மற்றும் அனைத்து வகையான ஆபாசங்களையும் அவர்கள் நாகரீகம் என்று கருதுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் இதை மறுப்பவர்களுக்கு எதிராக விரோதமான நிலைப்பாட்டை எடுத்து அவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறார்கள், ”என்று அவர் எச்சரித்தார்.

ஷேக் கஜாவி, இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்லாமோஃபோபியா மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரத்தைக் கண்டித்துள்ளார். அதே நேரத்தில் புனித குர்ஆன் நகல் எரிக்கப்பட்ட சம்பவங்களை இதற்குச் சமீபத்திய எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டார். “இயல்பான கலாச்சாரத்தை உடைத்து, இறைவனின் படைப்பை மாற்றி அவதூறு செய்பவர்கள் ஆன்மீக ரீதியில் திவாலாகி, தார்மீக நெருக்கடிகள் மற்றும் சமூகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், கருத்துச் சுதந்திரம் என்ற போலிக்காரணத்தின் கீழ் இஸ்லாமிய உலகிற்கு எதிரான தாக்குதல் பிரச்சாரங்களையும் விரோதச் செயல்களையும் முன்னெடுத்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகிறார்கள் என்று கூறினார்.

“இந்தச் செயல்களில் புனித குர்ஆனின் நகலைக் கொளுத்துதல், அவமானப்படுத்துதல் மற்றும் இழிவுபடுத்துதல் மற்றும் நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்தல் மற்றும் அவதூறு செய்தல் மற்றும் அவரது சுன்னாவை கேள்வி கேட்பதன் மூலம் இழிவுபடுத்துதல் ஆகியவை அடங்கும். இவ்வாறு, அவர்கள் முஸ்லிம்கள்மீது மறைமுகமான வெறுப்பைக் காட்டி, வெறுப்பு மற்றும் வன்முறையின் நெருப்பைத் தூண்டுகின்றனர் ”என்று இமாம் மேலும் குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!