சவூதி சுகாதார காப்பீட்டு கவுன்சில் ஆகஸ்ட் 1 முதல் ஒவ்வொரு பயனாளியும் ஒரு அடிப்படை மருத்துவக் காப்பீட்டை மட்டுமே பெற முடியும் என்ற உத்தரவை வெளியிட்டுள்ளது.
சவூதி சேம்பர்ஸ் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து ஒரு தொழிலாளி அல்லது அவரைச் சார்ந்தவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காப்பீட்டுப் பலன்களைப் பெறுவது ஆகஸ்ட் 1 முதல் நிறுத்தப்படும் என்றும், காப்பீட்டு ஆவணங்கள் புதுப்பித்தல் மற்றும் பிற செயல்முறைகள் உத்தரவிற்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் என்று கவுன்சில் தெளிவுப்படுத்தியுள்ளது.