கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 42,52,000 க்கும் மேற்பட்ட வழிபாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதாவது ஜூன் 25 முதல் ஜூலை 2 வரையிலான காலப்பகுதியில் துல்-ஹிஜ்ஜா பிறை 7 முதல் 14 வரையிலான காலகட்டத்தில், 4.25 மில்லியன் மக்கள் நபிகள் நாயகத்தின் மசூதிக்கு வருகை புரிந்துள்ளதாகப் பிரசிடென்சிக்கான ஏஜென்சி அறிவித்துள்ளது. சவூதி பிரஸ் ஏஜென்சி இதனைத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு, சேவை, சுகாதாரம், அவசரநிலை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன், மசூதிக்கு வரும் பயணிகள், பார்வையாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதையும் தலைமையகம் தெரிவித்துள்ளது.
ரவ்தா ஷெரீப்பைப் பார்வையிட அனுமதிக்கப்பட்ட வழிபாட்டாளர்களைத் தவிர, நபி (ஸல்) அவர்களை வாழ்த்துவதற்காகவும் சுமார் 2,71,173 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பிரசிடென்சி ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 6,782 க்கும் மேற்பட்ட முதியவர்கள் அவர்களுக்காக நியமிக்கப்பட்ட இடங்களிலிருந்து பயனடைந்துள்ளனர், மசூதியில் வழங்கப்பட்ட மத விரிவுரைகளைப் 14,766 பார்வையாளர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் மொத்தம் 46,138 பயணிகள் மற்றும் வழிபாட்டாளர்களுக்கு அன்பளிப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த எண் மற்றும் தகவல் தொடர்புச் சேனல்களை 4,279 பார்வையாளர்கள் மற்றும் வழிபாட்டாளர்கள் பயன்படுத்தியதாகவும் 17,650 பேர் கண்காட்சிகளைப் பார்வையிட்டதாகவும் அரசாங்க அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மொழித் தொடர்புச் சேவையின் பயனாளிகள் 3,001 பேரும், நூலகச் சேவையின் பயனாளிகள் 10,158 பேரும், 1,15,090 பேர் பல்வேறு போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்தி பயன் அடைந்துள்ளனர் என்றும் நோன்பு இருப்பவர்களுக்கு 2,03,294 பாட்டில்கள் ஜம்ஜம் தண்ணீர் மற்றும் 4,26,457 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.