ஒரு வருடத்தில் 425,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், சராசரியாக ஒரு நாளைக்கு 1,166 நிறுவனங்களும் சவூதி தொழிலாளர் சந்தையில் நுழைந்துள்ளன.அதன்படியில் ஏறக்குறைய 397,000 நிறுவனங்கள் தொழிலாளர் சந்தையில் நுழைந்ததால் பெரும்பாலான அதிகரிப்பு தனியார் துறை நிறுவனங்களில் காணப்பட்டது.
500க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பெரு நிறுவனங்கள் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டின் முடிவில் 10.82% வளர்ச்சி கண்டு 1,843 நிறுவனங்களை எட்டியுள்ளன. தொழிலாளர் சந்தையில் புதிதாக நுழைந்த 180 நிறுவனங்களில், 159 நிறுவனங்கள் தனியார் துறையிலும், 21 அரசு நிறுவனங்களாகவும் இருந்தன.
நான்கு அல்லது அதற்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட குறு நிறுவனங்களின் எண்ணிக்கை, சுமார் 392,000 நிறுவனங்களின் நுழைவுடன் 69.32% அதிகரித்துள்ளது, அவற்றில் 62 அரசு நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செயலில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 54.98% அதிகரித்து, மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையை 775,000 நிறுவனங்களாக இருந்த முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1.2 மில்லியனுக்கும் அதிகமாகக் கொண்டு வந்துள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.