ஹஜ் சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை மீறியதால், கடந்த ஹஜ் பருவத்தில் பயணிகளுக்கு ரியால் 160 மில்லியனுக்கும் அதிகமான தொகை திருப்பி அளிக்கப்பட்டதாக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr. Tawfiq Al-Rabiah கூறியுள்ளார்.
வியாழனன்று ஹஜ் ஏற்பாடுகள்குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அல்-ரபியா, ஹஜ் ஒப்பந்தங்களின் விதிகளை நிறைவேற்றத் தவறிய நிறுவனத்திற்கு அபராதம் விதிக்க அமைச்சகம் தயங்காது எனத் தெரிவித்துள்ளார். அபராதங்களை மட்டும் பார்க்காமல், ஊக்கத்தொகைகளிலும் அக்கறை செலுத்துகிறோம், எதிர்பார்ப்புகளை மீறும் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை ஊக்கப்படுத்தவும் கௌரவிக்கவும் நாங்கள் பணியாற்றுகிறோம், திருப்தியின் அளவை அளவிடுவதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன, ”என்று கூறியுள்ளார்.
அல்-ரபியா இந்த ஆண்டு ஹஜ்ஜிற்கான ஆரம்ப திட்டமிடல், தயாரிப்பு, பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் மின்னணு சேவைகள், உம்ரா பயணிகளின் வருகையைச் செயல்படுத்த பங்களிக்கும் வசதிகள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்தார். இந்த ஆண்டு முதன்முறையாக மெய்நிகர் ஹஜ் அனுபவங்களை நடைமுறைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.ஹஜ் சேவைகளின் விலையில் 39 வீதம் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரப் பொதியின் மூலம் 1.4 மில்லியன் பயணிகள் பயனடைந்துள்ளனர்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 58 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் குறைந்த விலையில் பொருத்தமான பேக்கேஜைத் தேர்ந்தெடுக்க, ஏழு மொழிகளில் ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டதாக அல்-ரபியா சுட்டிக்காட்டினார். உம்ரா விசாவை 30 நாட்களிலிருந்து 90 நாட்களுக்கு நீட்டிப்பதுடன், வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு சுமார் இரண்டு மில்லியன் பயணிகள் இருப்பதால், செயல்திறனை உறுதி செய்வதற்காக முதல் முறையாக மெய்நிகர் அனுபவங்களை நடைமுறை படுத்த உள்ளது. புனித தலங்களுக்கு இடையே எளிதாக நடமாடுவதை உறுதி செய்ய ஹஜ் நிறுவனங்களுடன் பயணிகளை அனுப்பும் செயல்முறையை ஒழுங்கமைக்க தெளிவான மற்றும் ஒருங்கிணைந்த திட்டத்தைத் தயாரித்துள்ளதாகக் கூறியுள்ளார்.