தொழில்துறை மற்றும் கனிம வள அமைச்சகம் (MIM) ஏப்ரல் 2023 இல் 53 புதிய தொழில்துறை உரிமங்களை வழங்கியது, இதில் 7 தொழில்துறை நடவடிக்கைகளுக்கு உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 உரிமங்களுடன் உணவு பதப்படுத்துதல் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து உருவான உலோகப் பொருட்கள் மற்றும் உலோகம் அல்லாத பிற கனிமப் பொருட்கள் ஒவ்வொன்றும் 8 உரிமங்களும், அடிப்படை உலோகங்கள், காகிதம் மற்றும் காகித பொருட்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், நீர் சேகரிப்பு, சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான பல்வேறு துறைகளுக்கும் தலா 4 உரிமங்கள் வழங்கப்பட்டன.
MIM இன் கீழ் தொழில்துறை மற்றும் சுரங்கத் தகவல்களுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைச்சகம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஏப்ரல் இறுதி வரை வழங்கிய தொழில்துறை உரிமங்களின் மொத்த எண்ணிக்கை 385 உரிமங்கள் ஆகும்.மேலும் சவூதி அரேபியாவில் கட்டுமானத்தில் உள்ள தொழிற்சாலைகள் அதே மாத இறுதி வரை 10,873ஐ எட்டியது, இதன் முதலீட்டு மதிப்பு SR1.440 டிரில்லியனும், ஏப்ரல் மாதத்தில் உரிமம் பெற்ற புதிய முயற்சிகளின் முதலீட்டு மதிப்பைப் பொறுத்தவரை, அது SR5.8 பில்லியன் என்றும் இந்த அறிக்கை தெரியப்படுத்தியது.
சிறு தொழில் நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான புதிய உரிமங்களைப் பெற்றன, அதாவது 94.34%, நடுத்தர நிறுவனங்கள் 5.66%. முதலீட்டு வகையின்படி மொத்த உரிமங்களின் எண்ணிக்கையில் தேசிய தொழிற்சாலைகள் முன்னணியில் 66.04% ஆகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் 11.32% ஆகவும் உள்ளன. கூட்டு முதலீட்டு நிறுவனங்கள் 22.64% ஆகும்.