சவூதி அரேபியாவின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை ஏப்ரல் இறுதி வரை தொடரும் எனத் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஏப்ரல் இறுதி வரை மழை தொடரும் என்று NCM செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்-கஹ்தானி தெரிவித்தார். காஃப்ஜி மாகாணத்தில் உள்ள மானிஃபா மையத்தில் 60 நிமிடங்களில் 42 மிமீ மழை பெய்துள்ளது, என்றார்.
கனமழை மற்றும் பலத்த காற்றின் தீவிரம் காரணமாகக் கிழக்கு மாகாண மாநகரசபை, நாட்டின் போக்குவரத்து களத்துடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தம்மாம் கிங் ஃபஹத் வீதியில் உள்ள சுரங்கப்பாதைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. வானிலை சீரானதும் சுரங்கப்பாதைகள் திறக்கப்படும் என நகராட்சி தெரிவித்துள்ளது.





