டிராவல் ஏஜென்சிகள் வழியாக விசா ஸ்டாம்பிங் செய்வதற்கான இறுதி தேதியை மும்பையில் உள்ள சவுதி துணை தூதரகம் தெரிவித்துள்ளது. 27 ஆம் தேதி வியாழக்கிழமை ஏஜென்சிகள் பாஸ்போர்ட் சமர்பிப்பதற்கான இறுதி தேதி என அறிவித்துள்ளது.
மே 1 ஆம் தேதி முதல் ஏஜென்சிகள் வழியாக ஸ்டாம்பிங் நடைபெறாது எனவும், VFS வழியாக மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கான VFS அலுவலகம் சென்னையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.