கடந்த திங்களன்று ஹூஸ்டனில் நடைபெற்ற SERA வீக் உலகளாவிய எரிசக்தி மாநாட்டில் உரையாற்றும் போது, ”எண்ணெய் மற்றும் எரிவாயுவை படிப்படியாக அகற்றும் கற்பனையை நாம் கைவிட்டு, அதற்குப் பதிலாக யதார்த்தமான தேவை அனுமானங்களைப் பிரதிபலிக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என்று சவூதி அராம்கோ தலைமை நிர்வாக அதிகாரி அமீன் நாசர் கூறினார்.
புதைபடிவ எரிபொருட்களை விரைவாகப் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களுடன் மாற்றுவதற்கான திட்டங்களை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும்,2024 ஆம் ஆண்டில் எண்ணெய் தேவை ஒரு நாளைக்கு 104 மில்லியன் பீப்பாய்கள் (bpd) என்ற புதிய சாதனையை எட்டும் என்றும், வளர்ந்து வரும் முதலீடு இருந்தபோதிலும் மாற்று ஆற்றல் இன்னும் ஹைட்ரோகார்பன்களின் அளவில் இடமாற்றம் செய்யவில்லை என்றும் நாசர் வலியுறுத்தினார்.
மேலும் மற்ற கார்பன் பிடிப்பு தொழில்நுட்பங்கள் மூலம் எரிபொருளில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை குறைப்பது மாற்று எரிசக்தி ஆதாரங்களை விட சிறந்த முடிவுகளை அடைகிறது என்று Aramco தலைவர் குறிப்பிட்டார்.





