பல ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 7 அமைச்சகங்களில் 84 பேர் கைது செய்யப்பட்டதாக சவுதி மேற்பார்வை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் (நசாஹா) கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
2,583 கண்காணிப்பு சுற்றுப்பயணங்களை நசாஹா நடத்தி, பல கிரிமினல் மற்றும் நிர்வாக வழக்குகளை ஆராய்ந்து, மேலும் இதன் விளைவாக 211 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு,பிரதிவாதிகள் அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், பணமோசடி மற்றும் போலியான பல ஊழல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்ததாக நசாஹா தெரிவித்தது, மேலும் கைது செய்யப்பட்ட 84 பேரில் சிலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதையும் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) சேர்ந்தவர்கள் தவிர, உள்துறை, பாதுகாப்பு, தேசிய காவலர், நீதி, சுகாதாரம், கல்வி, நகராட்சி மற்றும் கிராமப்புற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.