Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் ஊனமுற்ற சவூதி ஆண் தொழிலாளர்கள் இப்போது Wusool போக்குவரத்து உதவியைப் பயன்படுத்தலாம்.

ஊனமுற்ற சவூதி ஆண் தொழிலாளர்கள் இப்போது Wusool போக்குவரத்து உதவியைப் பயன்படுத்தலாம்.

334
0

சவுதியில் தனியார் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் Wusool போக்குவரத்து உதவித் திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட போக்குவரத்து பயன்பாடுகளின் உதவியோடு பணியிடத்திற்குச் செல்லும் ஒவ்வொரு பயணத்திலும் 80% செலவை ஈடு செய்யலாமென மனிதவள மேம்பாட்டு நிதியம் (HADAF) அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் வளர்ச்சித் திட்டங்களுக்கு இணங்க, வேலைகளின் நிலைதன்மை உறுதி செய்வதற்கும், தொழிலாளர் சந்தையில் மாற்றுத் திறனாளிகளின் பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதற்கும் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Wusool போக்குவரத்து உதவித் திட்டம் இதுவரை தனியார் துறையில் உள்ள சவூதி பெண் தொழிலாளர்களையும், ஊனமுற்றோர் உட்பட, தற்போது சவூதி ஊனமுற்ற ஆண் தொழிலாளர்ககளும் பயனடையலாம் என்று HADAF தெளிவுபடுத்தியது.Wusool அதன் பயனாளிகளுக்கு 24 மாதங்களுக்கு மாதந்தோறும் 1,100 வரை நிதி உதவி வழங்குகிறது, மேலும் இந்தத் திட்டம் அனைத்து சவுதி பகுதிகளையும் உள்ளடக்கியது.

இந்தச் சேவையில் பயனடைய விரும்புவோர், https://www.hrdf.org.sa/Home என்ற இணைப்பின் மூலம் Wusool இல் பதிவு செய்யலாமென HADAF தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!