Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உள்ளூர் மயமாக்கல், பராமரிப்பு ஒப்பந்தங்கள் கிவாவிற்குள் இ-சேவையாக அங்கீகரிப்பு- மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு...

உள்ளூர் மயமாக்கல், பராமரிப்பு ஒப்பந்தங்கள் கிவாவிற்குள் இ-சேவையாக அங்கீகரிப்பு- மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம்.

158
0

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) கடந்த திங்களன்று கிவா இயங்கு தளத்திற்குள் ஒரு மின்னணு சேவையாகச் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களை உள்ளூர் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் அமைச்சர் இன்ஜினியர் அஹ்மத் அல்-ராஜி அவர்கள் கூறியுள்ளார்.

பொது நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களை உள்ளூர் மயமாக்குவதையும், அந்த ஒப்பந்தங்களில் உள்ள இலக்கு உள்ளூர்மயமாக்கல் விகிதங்களுடன் நிறுவனங்களின் இணக்கத்தை சரிபார்ப்பதையும் இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொழிலாளர் சந்தையில் சவுதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அமைச்சகத்தின் முயற்சிகளுக்கு மின்னணு சேவை துணைபுரியும் என்றும் அவர் கூறினார்.

அரசு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் அனைத்து நிறுவனங்களுக்கும், குறைந்தபட்சம் 51% சதவீதத்தை மாநிலம் வழங்கும் நிறுவனங்களுக்கும் இந்த முடிவு பயன்படுத்தப்படும்.

மேலும் இதில் செயல்பாடு, பராமரிப்பு, சாலை செயல்பாடு மற்றும் பராமரிப்பு, நகரத்தைச் சுத்தம் செய்தல், கேட்டரிங், தகவல் தொழில்நுட்ப செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகிய பல ஒப்பந்தங்கள் அடங்கும்.

செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களின் உள்ளூர்மயமாக்கல் சேவையின் மூலம் மின்னணு தளத்தில் (கிவா) ஒப்பந்தங்களின் தரவைச் சமர்ப்பிக்க பொது நிறுவனங்களுடன் செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு இந்த முடிவு பொருந்தும்.

மேலும் நிறுவனங்களின் அளவைப் பொறுத்து 3 கட்டங்களுக்குள் முடிவு பயன்படுத்தப்படும், அதில் முதல் கட்டம் செப்டம்பர் 1, 2023 முதல் குறு நிறுவனங்களுக்கும் இரண்டாவது கட்டம் ஜூன் 1 முதல் பெரிய நிறுவனங்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது இது 2024 ஆம் அண்டு டிசம்பர் 1, முதலும் மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் மூன்றாம் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் MHRSD தெளிவுபடுத்தியது.

கிவா இயங்குதளம் பணித் துறைக்கான முக்கிய நுழைவாயில் என்றும், இது நிறுவனத்தின் மேம்பாடு, விரிவாக்கம் வரையிலான பயணத்துடன், பணியாளரின் முதல் வேலையிலிருந்து ஓய்வுபெறும் வரையிலான பயணத்திற்கும் துணைபுரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!