சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் 2024 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு ஹஜ் பயணிகளுக்கான நான்கு தொகுப்புகளின் பதிவு மற்றும் கட்டணக் கட்டமைப்பின் தொடக்கத்தை அறிவித்துள்ளது. Nusuk விண்ணப்பம் மற்றும் (http://Localhaj.haj.gov.sa) சவூதி அமைச்சகத்தின் இணையதளம் மூலம் ஹஜ் செய்ய விரும்பும் குடிமக்கள் மற்றும் நாட்டில் உள்ள வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
உயர்நிலை சேவை ஒதுக்கீட்டுடன் முதல் தொகுப்பு 10,366.10 ரியால் விலையிலும், இரண்டாவது தொகுப்பு 8,092.55 ரியால் விலையில் கிடைக்கிறது.மூன்றாவது பேக்கேஜிற்கு மிக உயர்ந்த கட்டணத்தை 13,265.25 ரியால் செலுத்த வேண்டும், நான்காவது தொகுப்பின் கீழ் செல்பவர்கள் 4,099.75 ரியால், குறைந்த விலையில் சேவைகளைப் பெறுவார்கள்.
அனைத்து விலைகளிலும் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) சேர்க்கப்படும். முதல் மற்றும் இரண்டாவது பேக்கேஜ்களின் விலையில் மக்காவிற்கு மற்றும் அங்கிருந்து செல்வதற்கான போக்குவரத்து செலவுகள் அடங்கும். மினா, அராபத் மற்றும் முஸ்தலிஃபா ஆகிய இடங்களுக்கு மஷைர் ரயில் அல்லது பேருந்துகள் மூலம் போக்குவரத்துச் செலவு இருப்பிடத்தைப் பொறுத்து சேர்க்கப்படும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
புனித தலங்களுக்கிடையில் போக்குவரத்து மூன்றாவது தொகுப்பில், Mashair ரயில் மூலம் மட்டுமே கிடைக்கும். நான்காவது தொகுப்பில் மக்காவில் உள்ள பயணியின் வசிப்பிடத்திலிருந்து மினாவிற்கு செல்லும் போக்குவரத்து செலவு அடங்கும்.ஜமாரத்தில் கல்லெறியும் சடங்கைச் செய்ய
தஷ்ரிக் (துல் ஹிஜ்ஜா 11, 12 மற்றும் 13) நாட்களில் பேருந்துகள் மற்றும் மஷைர் ரயிலில் பயணம் மூலம் நிறைவேற்றலாம்.





