புனித பயண சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் முன்பதிவு செய்து கட்டணத்தைச் செலுத்தி முடித்த உள்நாட்டு பயணிகளுக்கு ஹஜ் அனுமதிகளை வழங்க ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தொடங்கியுள்ளது.ஜூன் 25 ஆம் தேதி, அல்-ஹிஜ்ஜா 7 ஆம் தேதி வரை ஹஜ் செய்ய பதிவுகள் திறந்திருக்கும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிய தேதியில் பணம் செலுத்துவதில் தாமதன் அல்லது குடிமக்கள் முன்பதிவுகளை ரத்து செய்தால் காலியிடங்கள் ஏற்படலாம் என அமைச்சகம் அறிவித்துள்ளது.இணையதளம் அல்லது நுசுக் செயலி வாயிலாக முன்பதிவு செய்தால் இடங்கள் வழங்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹஜ் பயணம் தொடங்கும் 10 நாட்களுக்கு முன் பயணிகள் தேவையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சகம் கூறியுள்ளது. ஹஜ் அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் பூர்த்தி செய்வது கட்டாயம் என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.