அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற கருத்தை அடைய உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டங்களுக்குச் சவூதியின் தொடர்ச்சியான ஆதரவை சுகாதார அமைச்சர் ஃபஹ்த் பின் அப்துர்ரஹ்மான் அல்-ஜலாஜில் உறுதிப்படுத்தினார்.
உலக சுகாதார நிறுவனம் அமைக்கப்பட்டு 75 வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மான் ஆகியோரின் வாழ்த்துக்களைச் சுகாதார அமைச்சர் உரையில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அமைப்பின் முயற்சிகளுக்கும், விரிவான சுகாதார பாதுகாப்பு, டிஜிட்டல் சுகாதார முயற்சிகளுக்கும் சவூதி தாராளமான ஆதரவை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது என்று அவர் கூறினார்.
சவூதி அரேபியா 1948 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பின் செயலில் உறுப்பினராகவும், உலகளாவிய சுகாதார நிகழ்ச்சி நிரலை அடைவதில் முக்கிய பங்காளியாகவும் உள்ளது, இது தொற்றுநோய் தடுப்பு, மனித ஆயுட்காலம் அதிகரிப்பதற்கும், பரவலான நோய்களை ஒழிப்பதற்கும் ஆதரவு அளித்துள்ளது.