Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலக சாதனை படைத்த மனிதநேயப் பண்பாளர் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்கு சவூதி தமிழ்கலாச்சார மையத்தின்...

உலக சாதனை படைத்த மனிதநேயப் பண்பாளர் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்கு சவூதி தமிழ்கலாச்சார மையத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

262
0

 

 

 

 

 

 

 

ஜனவரி மாதம் 12ம் தேதி பத்து மணிநேரத்தில் சவூதி அரேபியா பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏழு நகரங்களில் நடந்த ஐந்து நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதை ரஃபா உலக சாதனையாளர் புத்தகம் பதிவு செய்திருந்தது.

மேலும் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகோதர சமுதாய விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழியாக்கத்தையும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 25ம்தேதி சென்னை ஈஞ்சம்பாக்கம் லா கஃப்பே அரங்கைப் பத்ருதீன் அவர்கள் சிறப்பு விருந்தனராகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

முன்னதாக மதிமுக துனைச்செயலாளரும் மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான மல்லை சத்யா அவர்கள் விருது பெறப்போகும் பத்ருதீன் அப்துல் மஜீது அவர்களுக்குச் சந்தன மாலை, மகூடம் மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக துனைச்செயலாளரும் மல்லை தமிழ்ச்சங்கத்தின் தலைவருமான மல்லை சத்யா அவர்கள் மற்றும் ரஃபா மீடியா இயக்குனர் பிரசன்னா அவர்கள் பத்ருதீன் அப்துல் மஜீது அவர்களுக்கு உலக சதானை சான்றிதழ் நினைவுப் பரிசும் பதக்கமும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா, மமக மாநில அமைப்புச்செயலாளர் மாயவரம் ஆமீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதன்பின் மல்லை சத்யா, பிரசன்னா மற்றும் ஜவாஹிருல்லா இணைந்து செய்தியாளருக்குப் பேட்டியளித்தனர், ரஃபா உலகப்புத்தகம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கிவருகிறது ஆனால் இன்று சாதனையாளர்களுக்குச் சாதனையாளராகக் கருதப்படும் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களின் சாதனையை அங்கிகரித்து விருது அளிப்பதை பெருமிதமாகக் கருதுகிறோம் எனத் தெரிவித்தனர்.

சவூதி வாழ் மக்களின் சமுதாய பணிகளுக்குப் பொருளாதார பங்களிப்புகளைத் தொடர்ந்து வழங்கியும் பற்பல விருதுகளைக் குவித்து வரும் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களைப் பல்வேறு மொழியைச்சேர்ந்த அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சவூதி தமிழ் கலாச்சார மையம் கடந்த வருடம் மே மாதம் பத்ருதீன் அவர்களுக்கு மனிதநேயப் பண்பாளர் விருது வழங்கிக் கவுரவித்தது குறிப்பிடதக்கது மேலும் திருமிகு பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களின் இந்த உலகசாதனை விருதுபெற்றதற்கு சவூதியில் வசிக்கும் தமிழ்மக்களின் சார்பாகச் சவூதி தமிழ் கலாச்சார மையம் பத்ருதீன் அப்துல் மஜீத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!