சவூதி அரேபியா அதன் சாலை வலையமைப்பின் அடிப்படையில் உலகில் மிகவும் இணைக்கப்பட்ட நாடாகத் தரவரிசையில் உள்ளது எனப் போக்குவரத்து மற்றும் தளவாட அமைச்சர் இன்ஜி. சலே அல்-ஜாசர் கூறினார். சவூதி அரேபியாவில் விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங்கள் ஆகியவற்றின் விகிதங்கள் சமீபத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன என்று ரியாத்தில் “பாதுகாப்பான மற்றும் சிறப்புமிக்க சாலைகள்” பிரச்சாரத்தைத் தொடங்கிய அமைச்சர் கூறினார்.
நீண்ட சாலை வலையமைப்பின் பாதுகாப்பு மட்டத்தை உயர்த்துவது மற்றும் சாலைப் பயனாளர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்குவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் என்று அமைச்சர் கூறினார்.
தரத்தை மேம்படுத்துதல், சந்திப்புகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் முதலீடு செய்தல் போன்ற பொறியியல் முயற்சிகள் கடுமையான விபத்துக்கள், இறப்புகள் மற்றும் காயங்களை 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளன என்று அல்-ஜாசர் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியா மூன்று வருட காலப்பகுதிக்குள் 5.7 என்ற சாலை தர மதிப்பீட்டை எட்டியுள்ளதாகவும், இது 2030 க்குள் தேவைப்படும் பயணத்தில் பாதிக்கும் மேலானதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.





