செங்கடல் திட்டம் சவூதி அரேபியாவின் லட்சிய கிகா திட்டங்களில் ஒன்றாக 2018 இல் நிறுவப்பட்டது. செங்கடல் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைதூர கனவாக இருந்தது, இது சவூதி அரேபியா ஒரு முதன்மையான உலகளாவிய சுற்றுலா தலமாக மாற ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது.
இத்திட்டத்தின் முதல் கட்டமாக மூன்று சொகுசு விடுதிகள் திறக்கப்படுகின்றன. செயின்ட் ரெஜிஸ் ரெட் சீ ரிசார்ட், உம்மாஹாட் என்ற தீவில் அமைந்துள்ளது. இது உயர் தொழில்நுட்ப உடற்பயிற்சி வசதிகள், குழந்தைகள் கிளப் மற்றும் அதிநவீன ஸ்பா மற்றும் நீச்சல் குளம் ஆகியவற்றை வழங்குகிறது. வில்லாக்கள் பசுமையான பவளப்பாறைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
விருந்தினர் அறைகள் மற்றும் நீச்சல் குளங்கள் கொண்ட வில்லாக்கள் மற்றும் உட்புறங்கள் சவுதி பாலைவனத்தின் அமைப்புகளைப் பிரதிபலிக்கின்றது. RSG இன் துணை நிறுவனமான WAMA, ஸ்கூபா டைவிங் படிப்புகள், மற்றும் ஹைகிங் போன்ற பல்வேறு சாகசங்களையும் வழங்குகிறது.
2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக முடிக்கப்படும் செங்கடல் திட்டம், 50 ஓய்வு விடுதிகள், 8,000 ஹோட்டல் அறைகள், 22 தீவுகள் மற்றும் 6 உள்நாட்டு தளங்களில் 1,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வழங்குகிறது. இதில் ஆடம்பர மரினாக்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் பற்பல பொழுதுபோக்கு தளங்கள் ஆகியவை அடங்கும்.
தி ரெட் சீ ரிசார்ட்டின் திறப்பு ஆடம்பர சுற்றுலாவில் ஒரு திருப்புமுனை மட்டுமல்ல, சவூதி விஷன் 2030 இன் தொலைநோக்கு பார்வைக்கு ஒரு சான்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.