உலகின் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை NEOM இல் Oxogon நகரில் நிறுவப்பட உள்ளது, இதற்கு தேசிய வளர்ச்சி நிதியம் (NDF) அதன் மேற்பார்வையிடப்பட்ட நிறுவனங்கள் மூலம், நிதியுதவி அளித்துள்ளது.
சவூதி தொழில்துறை மேம்பாட்டு நிதியம் (SIDF) மற்றும் தேசிய உள்கட்டமைப்பு நிதியம் (NIF), உள்ளூர் மற்றும் சர்வதேச வங்கிகளுடன் இணைந்து, நாட்டில் பசுமையான மற்றும் நிலையான தீர்வுகளை மேம்படுத்த, இந்த முயற்சி எடுத்துள்ளது.
உலகளவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கான சவூதியின் முயற்சிகளில் இது ஒரு பகுதியாகும்.
நாட்டின் முக்கியமான முதலீடுகளில் பச்சை ஹைட்ரஜன் ஒன்றாகும். 2060 ஆம் ஆண்டுக்குள் கார்பன் நடுநிலைமையை அடைவதற்கான நாட்டின் லட்சியத்திற்கு பங்களிப்பதன் மூலம், சவூதி விஷன் 2030 ஐ செயல்படுத்துவதையும் இது இலக்காக கொண்டுள்ளது.
NGHC அதிநவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தி, மின்னாற் பகுப்பு மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறது.
2026 இறுதிக்குள் நாளொன்றுக்கு 600 டன் கார்பன் இல்லாத ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் திறனை சவூதி , NEOM பகுதியில் அமைந்துள்ள Oxagon இல் உள்ள NGHC,பெற்றுள்ளது. உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்த பசுமை ஹைட்ரஜன் திட்டம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிகும் , வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
NDF வாரியத்தின் துணைத் தலைவர் முகமது அல்-துவைஜ்ரி
NGHC இன் மெகா ஆலைக்கு நிதியளிப்பது, நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் , கார்பன் இல்லாத எதிர்காலத்திற்கு பங்களிக்கும் என கூறியுள்ளார்.
முக்கியத் துறைகளில் உள்கட்டமைப்புத் திட்டங்களை ஊக்குவிக்க, இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய ஒற்றை நிதியாளராக இருக்கும் தேசிய உள்கட்டமைப்பு நிதியத்தால் (NIF) வழங்கப்படும் நிதியுதவிக்கு கூடுதலாக உள்ளது.