விநியோகச் சங்கிலிகளில் பங்களிக்கும் உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றாகச் சவூதி அரேபியா மாறும் என ரியாத்தில் நடைபெற்ற சப்ளை செயின் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாடு 2023 இன் 5வது அமர்வில் தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பண்தார் அல்கோராயேஃப் கூறியுள்ளார்.
தொழில்துறை பெரிய மற்றும் வலுவான திறன்களை அடிப்படையாகக் கொண்டது, மேலும் வலுவான தளவாட சேவைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் வெவ்வேறு மதிப்புச் சங்கிலிகள் பற்றிய ஆய்வின் மூலம் மட்டுமே இதை அடைய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
அனைத்து விநியோகச் சங்கிலிகளுக்கும் 9,000 தயாரிப்புகளை விரிவாக ஆய்வு செய்வது உட்பட மூலப்பொருட்கள் முதல் ஆற்றல் அல்லது தாதுக்கள் தேவைப்படும் சில தயாரிப்புகளாக மாற்றுவது வரை சவூதி ஒரு முக்கிய பங்காளராக இருக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற சில துறைகளில் பெரும்பாலான நிலைகளில் பங்கேற்கும் திறன் சவூதி கொண்டுள்ளது, மேலும் சுரங்கத் துறையில் நன்மைகளை அதிகரிக்க முடியும் என்பதையும் உலகிற்கு நிரூபித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையையும் ஒரு குறுகிய காலத்தில் உருவாக்கிச் சவூதியில் உற்பத்திக்கான பெரிய சந்தைப் பங்கைக் கொண்ட ஒரு பெரிய சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.





