Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் IMF இன் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விவாதிதார் சவூதி...

உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் IMF இன் திறன் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விவாதிதார் சவூதி நிதியமைச்சர்.

115
0

சவூதியின் நிதி அமைச்சரும் தற்போதைய சர்வதேச நாணய மற்றும் நிதிக் குழுத் தலைவருமான முகமது அல்ஜடான், IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற IMFC கூட்டங்களைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர்களின் விவாதங்களின் முடிவுகள் மற்றும் உலகளாவிய கொள்கை நிகழ்ச்சி நிரல் குறித்து விவாதித்தார்.

உறுப்பு நாடுகள் முழுவதும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்த IMF இன் தற்போதைய உறுதிப்பாட்டை அமைச்சர் பாராட்டி மேலும் பொது நிதி நிர்வாகத்தில் நிபுணத்துவத்திற்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் புதிய உலகளாவிய பொது நிதி கூட்டாண்மையை வரவேற்றார்.

சப்-சஹாரா ஆப்பிரிக்காவிற்காக நியமிக்கப்பட்ட IMF நிர்வாகக் குழுவில் ஒரு புதிய 25வது தலைவர் கூடுதலாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்க வளர்ச்சியாகும். இந்த நடவடிக்கை நவம்பர் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!