உலக சுற்றுலா அமைப்பின் (WTO) குறியீட்டில், சர்வதேச சுற்றுலாப் பயணிகளைப் பெறும் சிறந்த நாடுகளில் ,2019 இல் 25வது இடத்தில் இருந்த சவூதி 12 இடங்கள் முன்னேறி, 2022 ஆம் ஆண்டில் உலகளவில் 13ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16.6 மில்லியனை எட்டியுள்ளதாக WTO தெரிவித்துள்ளது.
மே 2023க்கான உலக சுற்றுலா காற்றழுத்தமானி அறிக்கையின்படி, சர்வதேச சுற்றுலா வருவாய் குறியீட்டில் 2019 இல் 27ஆம் இடத்தைப் பிடித்திருந்த சவூதி 16 இடங்கள் முன்னேறி 2022 இல் 11ஆம் இடத்திற்கு வந்தது.
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 7.8 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களைப் பெற்ற சுற்றுலாத் துறையில் சவூதி முன்னேற்றம் கண்டது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 64% அதிகமாகும்.உலக வர்த்தக அமைப்பின் சமீபத்திய தரவுப் படி, வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் அஹ்மத் அல்-கதீப், உலக சுற்றுலா வரைபடத்தில் நாட்டின் நிலையைத் தொடர்ந்து மேம்படுத்தவும், பொது மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து அமைச்சகம் நாட்டை உலகளாவிய சுற்றுலா மையமாக மாற்றத் தனது ஒத்துழைப்பை புதுப்பிக்கும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
உலகப் பொருளாதார மன்றத்தால் (WEF) வெளியிடப்பட்ட சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் குறியீட்டில் (TTDI) சவூது புதிய சாதனையை அடைந்து, உலக அளவில் 33ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.