கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜித்தாவில் உள்ள கிங் அப்துல்லாஜிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் உம்ரா பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை இஸ்லாமிய விவகாரங்கள், தவா மற்றும் வழிகாட்டல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீப் பின் அப்துல்லாஜிஸ் அல்-ஷேக் ஆய்வு செய்தார். தகவல் , அறிவியல் மற்றும் மின்னணு சேவைகளை வழங்கும் அமைச்சகத்தின் கவுன்டர்களை குறிப்பாக சோதனை செய்துள்ளார். மேலும் விமான நிலையத்தில் பணிபுரியும் அமைச்சின் குழுக்கள், பாஸ்போர்ட் மற்றும் சுங்கத் துறை ஊழியர்களைச் சந்தித்து, உம்ரா பயணிகளுக்கான சேவையில் பங்கேற்றார். ரமலானில் மக்காவிற்கு வரும் உம்ரா பயணிகளுக்கான பணியை செய்து உதவும் பணிக்குழுக்களின் கோரிக்கைகளையும் மற்றும் அவர்களுக்கு தேவையான சேவைகளையும் கேட்டு தெரிந்துக்கொண்டார்.உம்ரா செய்பவர்களுக்கு தரமான சேவைகளை வழங்குவதில் சிறந்து விளங்கும் மேற்பார்வையாளர்களை டாக்டர் அல்-ஷேக் பாராட்டினார்.