மக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித மசூதிகளின் திறன் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் டாக்டர் அப்தல்பத்தா மஷாத் தெரிவித்தார். சவூதி அரேபியாவுக்கு வெளியில் இருந்து வரும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
பெரும்பாலான பயணிகள் பாகிஸ்தான், இந்தோனேசியா, இந்தியா, ஈராக், ஏமன் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாக டாக்டர் மஷாத் கூறினார். நடப்பு சீசனில் பெரிய மசூதி மற்றும் நபிகள் நாயகம் மசூதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மஷாத் கூறினார்.
இந்த எண்ணிக்கை மற்றும் திறன் அதிகரிப்புக்கு முதன்மைக் காரணம் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவதாகும். நுசுக் பிளாட்ஃபார்ம் மூலம் மக்கள் விசா பெறுவதற்கும் சேவை வழங்குநர்களுடன் தொடர்புகொள்வதற்கும் வழங்கப்படும் வசதிகள், உம்ரா விசாக்களின் செல்லுபடியை 90 நாட்களுக்கு நீட்டித்தல் மற்றும் ஒரு பெண் பயணியுடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) தேவையை நீக்குதல், உம்ரா செய்யப் பல்வேறு வகையான விசாக்களை வைத்திருக்கும் சவூதி அல்லாதவர்களுக்கு உதவும் புதிய விதிமுறைகளும் எண்ணிக்கை மற்றும் திறன் அதிகரிப்புக்கு பங்களித்தன.
பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் 24 மணி நேர விருந்தினர் பராமரிப்பு மையங்களை (எனயா) நிறுவியுள்ளது. இதன் காரணமாக உம்ரா பயணிகளின் எண்ணிக்கை 30 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டிற்குள் நுழைவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், சவூதி விசா பயோ ஆப் மூலம் பயண ஆவணங்களைப் பதிவேற்றம் செய்தல் ஆகியவை ஹஜ் மற்றும் உம்ரா பயணிகளின் வருகையின் போது சரிபார்ப்பு நடைமுறைகளின் நேரத்தைக் குறைக்க உதவுவதற்காகச் சவூதி அரேபியா எடுத்த சில நடவடிக்கைகளாகும்.