உம்ராஹ் விசா வைத்திருக்கும் பயணிகள் வருகின்ற இம்மாதம் துல் காயிதா 15க்குள் அதாவது ஜூன் 4 க்குள் சவூதி அரேபியாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என்றும், உம்ராஹ் விசாவில் சவூதி அரேபியா வந்தவர்கள் துல்காயிதா மாதம் கடைசி நாளான 29 அன்று அதாவது ஜூன் 18 க்குள் சவூதியினை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஹஜ் மற்றும் உம்ராஹ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
உம்ராஹ் விசா வைத்திருப்பவர்கள் எக்காரணம் கொண்டும் ஹஜ் செய்ய அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் மீறித் தங்கி இருப்பவர்கள் மற்றும் ஹஜ் செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் படுவார்கள் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.