இனி பல்கலைக்கழக இளங்கலை பட்டம் பெற்ற சவூதி குடிமக்கள் மட்டுமே தொழில்துறை மற்றும் சுரங்க ஆலோசனை உரிமத்தைப் பெற விண்ணப்பிக்க முடியும் என்றும் மேலும் இநத செயல்முறை இந்த வாரம் தொடங்கும் என்றும் தொழில்கள் மற்றும் கனிம வளங்கள் அமைச்சகம்
அறிவித்துள்ளது.
ஆலோசனை உரிமம் வழங்க அமைச்சகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, A பிரிவு உரிமம் பெறுபவர் 10 புள்ளிகளைப் பெற வேண்டும், B பிரிவு உரிமதாரர் 15 புள்ளிகளைப் பெற வேண்டும், C பிரிவு உரிமதாரர் குறைந்தபட்சம் 20 புள்ளிகளைப் பெற வேண்டும்.இதில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் 5 புள்ளிகள் பெற்றவர்களாகவும், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 10 புள்ளிகள் பெற்றவர்களாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 1 புள்ளிகள் பெற்றவர்களாகவும் வகைப்படுத்தப்படுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட அதிகாரசபையிடமிருந்து கல்வித் தகுதியைப் பெற்ற சவூதி குடிமக்கள் மட்டுமே தொழில் மற்றும் சுரங்கத்திற்கான ஆலோசனை உரிமங்களை வழங்குவார்கள் என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சகத்தின் உரிமம் இல்லாமல் இந்தத் தொழில்களை மேற்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் உரிமம் மாற்ற அனுமதிக்கப்படவில்லை.
தொழில்துறையின் நடைமுறைகளை உரிமதாரர் கடைப்பிடிக்க வேண்டும் என்று அமைச்சகம் நிபந்தனைகளை விதித்துள்ளது மற்றும் மீறுபவர்களுக்கு மீறலைப் பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட அபராதம் விதிக்கப்படலாம்.