பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்கள் நடந்து முடிந்த வெற்றிகரமான ஹஜ் நடவடிக்கைக்காக அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெரும் முயற்சிகளைப் பாராட்டினார்.
மேலும் உள்துறை அமைச்சரும், உச்ச ஹஜ் கமிட்டியின் தலைவருமான இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சவுத் பின் நயீஃபுக்கு அனுப்பிய கடிதங்களில் அரசரும் பட்டத்து இளவரசரும் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
ஈத் அல்-அல்ஹா மற்றும் வருடாந்திர ஹஜ் பயண செயல்களின் வெற்றியை முன்னிட்டு உள்துறை அமைச்சர் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பியிருந்தார்.
நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் இல்லாத ஆரோக்கியமான சூழலில் நடத்தப்பட்டள்ளதால் இந்த ஆண்டு ஹஜ் சீசன் மிகவும் வெற்றிகரமாக நடந்துள்ளது” என்றும் மன்னர் தனது பதில் செய்தியில் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே எல்லாப் புகழும் என்று நன்றி தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
ஒருங்கிணைந்த பாதுகாப்பு, தடுப்பு, அமைப்பு, சுகாதாரம், சேவை மற்றும் போக்குவரத்துத் திட்டங்கள் ஆகிய மட்டங்களில் அனைவரும் தங்கள் ஹஜ் செயல்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்து செயல்படுத்துவதில் மேற்கொண்ட சிறந்த முயற்சிகளுக்கு மன்னரும் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. “இது இறைவனை நம்பி வருகை தந்த விருந்தினர்களுக்கு – கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலுக்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும் – ஆன்மீகம், அமைதி மற்றும் நம்பிக்கை நிறைந்த சூழ்நிலையில் தங்கள் சடங்குகளை எளிதாகவும் வசதியாகவும் செய்ய முடிந்தது என்றும் தெரிவித்தனர்.