சவூதி அரேபியா முழுவதும் உள்ள 20 பல்கலைக்கழகங்கள் ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் புதிய கல்வியாண்டில் மூன்று செமஸ்டர் முறைக்குப் பதிலாக இரண்டு செமஸ்டர் முறைக்கு மாற முடிவு செய்துள்ளன.
ஜித்தாவின் கிங் அப்துல் அஜிஸ் பல்கலைக்கழகம், ரியாத்தின் கிங் சவுத் பல்கலைக்கழகம், தம்மாமின் இமாம் அப்துல்ரஹ்மான் பின் பைசல் பல்கலைக்கழகம், அல்-அஹ்சாவின் கிங் பைசல் பல்கலைக்கழகம், அபஹாவின் கிங் காலித் பல்கலைக்கழகம், அல்-காசிம் பல்கலைக்கழகம், ரியாத்தின் இளவரசி நூரா பின்த் அப்துல்ரஹ்மான் பல்கலைக்கழகம், ஜித்தா பல்கலைக்கழகம், மதீனாவின் தைபா பல்கலைக்கழகம், அல்-ஜூஃப் பல்கலைக்கழகம், நஜ்ரான் பல்கலைக்கழகம், தபூக் பல்கலைக்கழகம், ஹஃபர் அல்-பாதின் பல்கலைக்கழகம். ஷக்ரா பல்கலைக்கழகம், மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகம், சவூதி எலக்ட்ரானிக் பல்கலைக்கழகம், மஜ்மா பல்கலைக்கழகம், பிஷா பல்கலைக்கழகம், தாயிஃப் பல்கலைக்கழகம் மற்றும் ஹெயில் பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்கனவே இருந்த மூன்று செமஸ்டர் முறையை ரத்து செய்து இரண்டு செமஸ்டர்களாக மாற்றியுள்ளன.
புதிய கல்வியாண்டின் தொடக்கத்திலிருந்து இரண்டு செமஸ்டர் முறைக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் வரும் நிலையிலும், 9 பல்கலைக்கழகங்கள் மூன்று செமஸ்டர் முறையிலேயே தொடரும் என்று பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.