கரியாத் அல்-உல்யாவில் உள்ள பள்ளி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ள நிலையில், மாணவியின் உடல் நிலை சீராக இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகள் இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் பள்ளியின் பின்புறம் காணப்பட்டதாக மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளும் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறிய பின், தேடுதலின் முடிவில் பள்ளி பாதுகாப்புக் காவலர் மாணவியைக் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.
முதலில் கரியாத் அல்-உல்யா பொது மருத்துவமனையிலும், பின் நைரியா பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களப் பேச்சாளர் சயீத் அல்-பஹேஸ் மாணவியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.