இந்த ஆண்டு புனித ஹஜ் காலங்களின்போது ஹரமைன் அதிவேக இரயில்வேயைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை 750,000 ஐ எட்டியுள்ளது, இது 2022 ஆண்டை விட 96% அதிகரித்துள்ளதாகச் சவூதி ரயில்வே நிறுவனம் (SAR) தெரிவித்துள்ளது. ஹஜ் 2023 இல் 3,627 பயணங்கள் இயக்கப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டைவிட 79% அதிகமாகும்.
அதிக தேவையுள்ள நாட்களில் 126 பயணங்கள் இயக்கப்பட்டதாக SAR கூறியுள்ளது. துல்-ஹிஜ்ஜாவின் 7வது நாளில் 131 பயணங்களை இயக்கியுள்ளத மற்றும் இது ஹரமைன் ரயில்வே வரலாற்றில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணங்கள் ஆகும்.
ஹரமைன் இரயில்வே ஹஜ் பயணிகள் மற்றும் பிற பயணிகளை மக்காவிற்கும் மதீனாவிற்கும் ஏற்றிச் சென்றது, ஜித்தாவில் உள்ள பிரதான நிலையம், கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலையம், ராபிக்கில் உள்ள கிங் அப்துல்லா பொருளாதார நகரத்திற்கு கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.
ஹரமைன் ரயில்வேயின் நிர்வாகத் துணைத் தலைவர் கூறும்போது ஹரமைன் ரயிலை இயக்கும் சவுதி-ஸ்பானிஷ் ரயில்வே திட்ட நிறுவனம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அங்கீகரிக்கப்பட்ட நெறிமுறைக்குள் ஹரமைன் ரயில்வேக்கான செயல்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக ராயன் அல்-ஹர்பி கூறியுள்ளார். இரண்டு புனித மசூதிகளில் இருந்தும் ஹஜ் பயணிகளுக்குப் பாதுகாப்பு வசதியுடன் பயணங்களை எளிதாக்கும் ஒரு விரிவான செயல்பாட்டுத் திட்டமாக இது செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.