நடப்பு ஆண்டில் சுமார் 42 பார்வை திறனற்ற ஆண்களும் பெண்களும் இந்த ஆண்டிற்கான ஹஜ் பயணத்தை மேற்கொண்டதாக ரியாத்தில் உள்ள பார்வையற்றோருக்கான தேசிய சங்கமான கஃபீஃப் அறிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கு நிதியுதவியும் இந்த மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.
ஜமாரத்தின் மீது கல்லெறிதல் மற்றும் தவாஃப் அல்-விதா அதாவது ஹஜ்ஜின் நிறைவு நாளில் பிரியாவிடை தவாப் சுற்றுதல் உட்பட அனைத்து ஹஜ் கிரிகைகளையும் பார்வையற்ற பயணிகள், ஒருங்கிணைக்கப்பட்ட வசதியுள்ள சேவைகளுக்கு மத்தியில் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ஆண்டு ஹஜ்ஜை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் கஃபீஃப் நிர்வாக மற்றும் நிதி விவகாரங்களின் இயக்குனர் அப்துல் அஜிஸ் அல்-முபாரக் அவர்கள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்த 42 பார்வையற்ற பயணிகள் மற்றும் அவர்களது தோழர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஹஜ் செய்ததாகவும் அல்-முபாரக் மேலும் கூறினார்.