மே 09 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சிஐஐ மற்றும் யங் இந்தியா தலைமையிலான குழு ரியாத்திற்கு பயணம் செய்தது. இளம் தொழில்முனைவோர் கூட்டணி (YEA) அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது ,அதற்கான முன்னோட்ட நடவடிக்கையாக இந்த வருகை நடந்துள்ளது.
இளம் தொழில்முனைவோர் கூட்டணியின் (YEA) தலைவர் HRH இளவரசர் ஃபஹத் பின் மன்சூர் பின் நாசர் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
PIF, ARAMCO, SABIC, முதலீட்டு அமைச்சகம், Monsha’at, தகவல் தொடர்பு அமைச்சகம், STC மற்றும் MISK உள்ளிட்ட முக்கிய சவூதி அரசாங்க அதிகாரிகளுடன் தூதுக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
இரு நாடுகளிலும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் மற்றும் தொடக்கத் துறைகளை இணைக்கும் வழிகள்குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் 100 யூனிகார்ன்கள் மற்றும் 80K ஸ்டார்ட்அப்களை உருவாக்கி, உலகின் ஐடி மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது .வேகமாக வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் தொழில்கள்மூலம் சவூதி அரேபியாவும் மாற்றங்களைக் கண்டுள்ளது
பிரதிநிதிகள் குழுவிற்கு HRH இளவரசர் ஃபஹத் அல் சௌத் மே 11 அன்று
விருந்தளித்தார். இந்நிகழ்ச்சியில் திருமதி ரிது யாதவ், இந்தியத் தூதரகத்தின் வர்த்தகப் பிரிவு இரண்டாம் செயலாளரும் கலந்து கொண்டார்.
சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் டாக்டர். சுஹெல் அஜாஸ் கான், மே 12 அன்று, பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, இந்தியா-சவூதி இருதரப்பு உறவுகளைப் பற்றி விவாதித்தார். இருதரப்பிலும் பொருளாதார உறவுகள் வளர்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் இந்தியாவும் சவூதி அரேபியாவும் கூட்டாண்மை கவுன்சில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடந்த டிசம்பர் மாதம் SME துறையை ஆதரிக்க Monshaat மற்றும் SIDBI இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற லீப் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சுமார் 45 நிறுவனங்களின் பெரிய குழு சவூதி அரேபியாவுக்குச் சென்றிருந்தது