இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியம் ஜெய்சங்கருடன் சவூதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளார்.
இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இந்த உரையாடலில் இடம் பெற்றிருந்ததது.
இரு தரப்பும் பொதுவான பல சர்வதேச பிரச்சினைகளில் இருதரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான அடித்தளங்களை அமைப்பதில் இரு நாடுகளின் முயற்சிகளை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றை குறித்தும் இருவரும் விவாதித்துள்ளனர்.