ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை அன்று…
தலைநகர் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சமூகநல தலைமைப் பொருப்பாளாராகக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறப்பாகப் பணியாற்றி ஓய்வு பெற்று செல்லும் அதிகாரி திரு. சஜீவ் அவர்களுக்குப் பிரிவு உபச்சார விழா ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது.
All India Steering Committee ஒருங்கிணைத்திருந்த இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் பிரியா விடை கொடுத்தனர்.
இந்த நிகழ்வில் பெருவாரியான தமிழர்களும் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய தமிழ் மக்களின் பிரதிநிதியும், ஒருங்கிணைபாளர்களில் ஒருவருமான திரு. அஹமது இம்தியாஸ் அவர்கள், திரு. சஜீவ் அவர்களின் மூன்றாண்டு காலச் சேவையைப் பாராட்டியும், இந்தியத் தூதரகத்தின் சமூக நலப்பிரிவு நம் இந்தியச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் ம சிலாகித்து பாராட்டிப் பேசினார்.
மேலும் திரு. சஜீவ் அவர்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகள் தெரிந்திருந்த காரணத்தால் கோரிக்கைகள் வைக்கும் இந்தியர்களுக்கு மொழிப் பிரச்னையின்றி உடனடியாகக் காலதாமதமின்றி உதவினார் என்றும், சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியத் தன்னார்வலர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் இணைத்தார் என்றும் இது இனியும் தொடர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.