இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அசுத்தமான இருமல் சிரப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
QP Pharmachem Ltd தயாரித்த Guaifenesin TG சிரப்பின் சோதனை மாதிரிகள், “ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல்” இருப்பதைக் காட்டியதாக WHO கூறியுள்ளது. இது மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை , உட்கொண்டால் ஆபத்தானவையென WHO எச்சரித்துள்ளது.
QP Pharmachem இன் நிர்வாக இயக்குனர்
சுதிர் பதக், 18,346 பாட்டில்களை கம்போடியாவிற்கு அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு ஏற்றுமதி செய்ததாகக் கூறியுள்ளார். மேலும் நாங்கள் இந்தப் பாட்டில்களை பசிபிக் பகுதிக்கு அனுப்பவில்லை, அங்குப் பயன்படுத்துவதற்கு சான்றளிக்கப்படவில்லை என்றும்,ல்
இது மார்ஷல் தீவுகள் மற்றும் மைக்ரோனேஷியாவை எவ்வாறு சென்றடைந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
மார்பு நெரிசல் மற்றும் இருமல் போக்கப் பயன்படும் இந்தத் தயாரிப்பு ஆஸ்திரேலியாவின் மருந்து கட்டுப்பாட்டு சிகிச்சை பொருட்கள் நிர்வாகத்தால் சோதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா டிரில்லியம் பார்மா மூலம் சிரப் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அக்டோபரில், காம்பியாவில் சிறுநீரக பாதிப்புகளால் 66 குழந்தைகள் இறந்ததற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு இருமல் சிரப்களை WHO உலகளாவிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததற்கு காரணமாக இருந்த இருமல் சிரப் நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் மூன்று இறப்புகள் மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகளுக்குக் காரணமான கண் சொட்டு மருந்துகளின் இந்திய உற்பத்தியாளர் பல விதிமுறைகளை மீறியுள்ளதாக FDA கூறியுள்ளது.