Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் இந்தியப் போ் விமானம் சவூதிக்கு வருகை

இந்தியப் போ் விமானம் சவூதிக்கு வருகை

299
0

வரலாற்றில் முதன்முதலில், இந்திய விமானப்படையின் எட்டு விமானங்கள் பிப்ரவரி 26 அன்று ராயல் சவுதி விமானப்படை தளத்தில் தரையிறங்கியது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒற்றுமையை வெளிப்படுத்திருக்கிறது. 05 MIRAGE, 02 C17 மற்றும் 01 IL 78 டேங்கர்களுடன் 145 ஏர் வாரியர்களைக் கொண்ட இந்தியக் குழு ஒரே இரவில் சவூதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த விமானங்களை, RSAFன் மூத்த அதிகாரிகள், இந்தியத் தூதர் Dr.Suhel Azaj Khan, பாதுகாப்புத் துறை இணை அதிகாரி Col G.S.Grevel  மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். பிப்ரவரி 27 அன்று, இங்கிலாந்தில் நடந்த கோப்ரா வாரியர் 23 பயிற்சியில் பங்கேற்பதற்பதற்காகக் காண்டிஜெண்ட் சென்றுள்ளது.

தூதர் Dr.Khan, ஏர் வாரியர்ஸில் தனது உரையின்போது இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை எடுத்துரைத்தார். இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சமாக இராணுவ இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். தூதர் டாக்டர் கான் மற்றும் கன்டிஜென்ட் கமாண்டர் ஆகியோர் ராயல் சவுதி விமானப்படையின் தளத் தளபதியுடன் உரையாடலை மேற்கொண்டனர், அதைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டது.

இந்தியப் படைக்கு அளிக்கப்பட்ட அனைத்து ஆதரவுக்கும்  தூதர் நன்றி தெரிவித்தார். பேஸ் கமாண்டர் இந்தியன் ஏர் வாரியர்ஸை வரவேற்று, வரவிருக்கும் கோப்ரா வாரியர் 23 பயிற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். மாலையில்  வரவேற்பு நிகழ்வின்போது, ​​தூதுவர் குழு உறுப்பினர்களுடன் உரையாடலையும் மேற்கொண்டார்.

குழு உறுப்பினர்கள் தங்கள் செயல்பாட்டு அனுபவங்களையும், வரவிருக்கும் பயிற்சிக்கான திட்டமிடலையும் பகிர்ந்து கொண்டனர். விமானப்படை வீரர்கள் பலர் சமீபத்தில் ஆபரேஷன் தோஸ்தில் பங்கேற்று, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துர்கி மற்றும் சிரியாவுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் நடந்த ஏரோ இந்தியா ஷோவில் சவூதி அரேபியாவிலிருந்து ஒரு பெரிய பிரதிநிதிகள் குழு கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!