இந்த ஆண்டு ஹஜ் செய்வதற்காக விமானம் மற்றும் தரைவழி மார்க்கமாக மூலம் மதீனா வந்தடைந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை வரை 531,243 ஐ எட்டியுள்ளது.
இது மதீனாவில் யாத்ரீகர்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்கும் ஹஜ் வருகைக் குழுவின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஆகும்.
மேலும் கிட்டத்தட்ட 378,698 யாத்ரீகர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்குச் சென்றுள்ளனர் மற்றும் 152,500 பேர் இன்னும் மதீனாவில் உள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, 21,891 யாத்ரீகர்கள் மருத்துவ சேவைகளால் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.