பாஸ்போர்ட் பிரிவின் பொது இயக்குநரகம் இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு 1,342,351 யாத்ரீகர்கள் நாட்டின் அனைத்து வான், தரை மற்றும் துறைமுகங்கள் வழியாகத் திங்கட்கிழமை நிலவரப்படி வருகை புரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வெளியிலிருந்து விமான நிலையங்கள் வழியாக வந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 1,280,240 ஆகவும், தரை வழி மார்க்கமாக வந்தவர்களின் எண்ணிக்கை 57,463 ஆகவும், கடல் துறைமுகங்கள் வழியாக வந்தவர்களின் எண்ணிக்கை 4,648 ஆகவும் இருப்பதாக இயக்குநரகம் மேலும் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.