Home மற்றவை ஆரோக்கியம் & நல்வாழ்வு இஞ்சிப்பால்..!

இஞ்சிப்பால்..!

436
0

கொடிபோல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க…

அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க…

சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க…

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி..?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும்…

தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும்…

தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டிச் சாரை எடுத்துக் கொள்ளணும்…

அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும்…

அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காகச் சேர்த்துக்கணும்…

அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார்…

இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கணும்…

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்..?

1. நுரையீரல் சுத்தமாகும்…

2. சளியை ஒழிச்சு கட்டிடும்…

3. வாயுத் தொல்லை என்பதே வராது…

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்…

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்…

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்…

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்…

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் ச௧்தி இதுக்கு இருக்கு…

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்…

10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே…

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா..?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்…

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!