5,280,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கடத்த முயற்சித்த 6 பேரைச் சவூதி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பொது இயக்குநரகத்தின் (GDNC) செய்தித் தொடர்பாளர் மேஜர். மர்வான் அல்-ஹாசிமி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்களைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.இது நாட்டிற்கும், அதன்இளைஞர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் எனக் கூறியுள்ளார்.
5,280,000 ஆம்பெடமைன் மாத்திரைகளை ஜித்தா வழியாகச் செல்லும் கற்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையத்தின் (ZATCA) ஒருங்கிணைப்பால் இந்தக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்த ஆறு நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.