பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானின் ஆதரவின் கீழ், சவூதி ஒட்டக கூட்டமைப்பு ஆகஸ்ட் 1, 2023 அன்று தாயிஃப் ஒட்டக சதுக்கத்தில் பட்டத்து இளவரசர் ஒட்டக திருவிழாவை நடத்துகிறது.
திருவிழாவில் நடைபெறும் பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்குச் சவூதி ரியால் 56.255 மில்லியன் வழங்கப்படும் எனச் சவுதி ஒட்டக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
589க்கும் மேற்பட்ட சுற்றுகள் கொண்ட பந்தயத்தில் கணிசமான எண்ணிக்கையிலான உள்ளூர் மற்றும் சர்வதேச ஒட்டக உரிமையாளர்கள் போட்டியிட இருக்கிறார்கள்.
திருவிழா 350 சுற்றுகள் கொண்ட ஆரம்ப பந்தயத்துடன் தொடங்கும், இது ஆகஸ்ட் 1 முதல் 12 வரை நடைபெறும்.
2018 ஆம் ஆண்டுத் திருவிழா தொடங்கியதிலிருந்து, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான ஒட்டக ஆர்வலர்களை ஈர்த்துள்ளது.
இந்த விழா சவூதி அரேபியாவின் ஒட்டக வரலாற்றைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் பாடுபடுகிறது.இந்தப் பாரம்பரியத்தை ஆதரிக்கும் பல்வேறு நிகழ்வுகள்மூலம் கணிசமான வருவாய் பெறப்பட்டுள்ளது.மேலும் இது சவுதி அரேபியாவில் ஒட்டகங்களைச் சுற்றியுள்ள கலாச்சாரம் மற்றும் பிற அரபு மற்றும் இஸ்லாமிய மரபுகளில் கவனம் செலுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது