இந்த ஆகஸ்ட் மாதம் வானில் இரட்டை சூப்பர் மூன் என்ற நிகழ்வைப் பார்க்கின்ற வாய்ப்பு உள்ளதால் பார்வையாளர்களின் ஆவல் இரட்டிப்பாகியுள்ளது மேலும் ஒரு சிறந்த அனுபவத்தை இந்நிகழ்வு நிகழ்த்தும் என்றும் வானியற்பியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முழு நிலவானது தென்கிழக்கில் உதயமாகி இயல்பைவிட சற்று பிரகாசமாகவும் பெரிதாகவும் தோன்றும் முதல் காட்சியை இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணலாம் என்றும் மேலும் இது வழக்கத்தைவிட அருகில் அதாவது வெறும் 222,159 மைல்கள் தொலைவில் தென்படுவதால் சூப்பர் மூன் என்றழைக்கப்படுகின்றது.
மீண்டும் ஆகஸ்ட் 30 இரவும் இந்தச் சந்திரன் மிக அருகில் மிகக்குறைவான பாதையில் அதாவது 222,043 மைல்கள் தொலைவில் தென்படும் என்றும் வானியற்பியல் அமைச்சகம் கூறியுள்ளது.
இது கடந்த 2018 ஆம் ஆண்டில் இதுபோல் ஒரே மாதத்தில் இருமுறை தென்பட்டதாகவும் இவை மீண்டும் 2037 ஆம் ஆண்டுவரை இதுபோல் தெரியாது என்றும் இத்தாலிய வானியலாளரும் மெய்நிகர் தொலைநோக்கி திட்டத்தின் நிறுவனருமான ஜியான் லூகா மாசி அறிவித்துள்ளார்.